மகளிர் உலகக் கோப்பை – நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், நவி மும்பையில் நடைபெற்ற 24வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 109 ஓட்டங்களும் பிரதிகா ராவல் (Pratika Rawal) 122 ஓட்டங்களும் பெற்றனர்.
இதை அடுத்து, 341 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் புருக் ஹலிடே (Brooke Halliday) 81 ஓட்டங்களும் இசபெல்லா கேஸ் (Isabella Gaze) 65 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியை 53 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அந்த வகையில், அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளன.




