மகளிர் T20 உலகக் கோப்பை – இரண்டாவது தோல்வியை பதிவு செய்த இலங்கை
9வது பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிலாக்ஷி சில்வா 29 ரன்களும் ஹர்ஷிதா 23 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மேகன் ஸ்கட் 3 விக்கெட், மொலினஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
தொடர்ந்து 94 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரலிய அணி அதிரடியாக விளையாடி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அந்த அணியில் பெத் மூனே 43 ரன்கள் குவித்தார் .