Women’s T20 WC – பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா
9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலியா ரியாஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டும், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.
(Visited 17 times, 1 visits today)





