மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை! இலங்கை – ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இன்று இலங்கை அணி வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி நேற்று மதியம் இலங்கை வந்தடைந்தன. நாளைய தினம் இடம்பெறும் போட்டிக்காக இந்திய அணியும் இலங்கை வந்தடைந்துள்ளது.
இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.
இருப்பினும், நியூசிலாந்தை 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
இதேவேளை, நாளை இந்தியா-பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.





