இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளுடன் 33 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நேற்றைய தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 10 கோடி ரூபா ஆகும்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை