உத்தர பிரதேசத்தில் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்
உத்தர பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹரிஷ்சந்திராவின்(Harishchandra) மனைவி 35 வயது சங்கீதா, தனது இரண்டு குழந்தைகளான 3 வயது சிவான்ஷ்(Shivansh) மற்றும் 1 வயது சுபாங்கரை (Subhankar) கழுத்தை நெரித்து கொன்றதாக கச்வா(Kachwa) காவல் நிலைய அதிகாரி அமர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் தனது வீட்டின் கூரையில் தென்னை நார் கயிற்றைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.





