ஐரோப்பா

37000 அடி உயரத்தில் குழந்தை பெற்ற பெண் : பெல்ஜியம் சென்ற விமானத்தில் சம்பவம்!

37000 அடி உயரத்தில் பயணித்த விமானத்தில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

விமானத்தில் இருந்து மருத்துவர் மற்றும் செவிலியர் ஒருவருக்கு அவருக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன் விமானம் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள டக்கரை விட்டு வெளியேறியபோது, ​​அந்தப் பெண் தனக்கு கடுமையான வலி இருப்பதாகக் கூறினார்.

இதனையடுத்து விமான ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதிர்ஷடவசமாக விமானத்தில் செவிலியர் மற்றும் மருத்துவர் ஒருவர் பயணித்த நிலையில் அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமானம் பெல்ஜியத்தை அடைவதற்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் பேஸ்புக்கில், ஜெனிஃபர் சிறிய குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!