வட அமெரிக்கா

அடையாளம் காணப்பட்ட நியூயார்க் ரயிலில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்

அண்மையில் நியூயார்க் நகரில், ரயில் ஒன்றில் பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.உயிரிழந்த பெண்ணின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 57 வயது டெப்ரினா கவாம் என்றும் அவர் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்றும் நியூயார்க் மருத்துவ அதிகாரி அலுவலகம் டிசம்பர் 31ஆம் திகதியன்று தெரிவித்தது.

விரல் ரேகை மூலம் அவர் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் நிறுத்திவைப்பட்டிருந்த ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த கவாமை குவாட்டமாலா நாட்டவரான 33 வயது செபாஸ்டியன் ஸபேட்டா உயிருடன் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

அவர்மீது கொலை, தீமூட்டுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஸ்பேட்டா 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்தார்.வந்த சில நாள்களில் அவர் குவாட்டமாலாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

அதையடுத்து, அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு எப்போது வந்தார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்