ஜார்க்கண்டில் துன்புறுத்தலை எதிர்த்த பெண் மீது கொதிக்கும் எண்ணெயால் தாக்குதல்
ஜார்க்கண்ட்(Jharkhand) மாநிலம் கிரிதிஹ்(Giridih) மாவட்டத்தின் முஃபாசில்(Mufasil) காவல் நிலையப் பகுதியில் உள்ள லேடா(Letha) பஞ்சாயத்துக்கு உட்பட்ட காடி கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் ஒரு பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உடல் ஊனமுற்றவர், மேலும் அவர் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கிராமத்தில் ஒரு சிறிய துரித உணவு கடையை நடத்தி வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று, இளைஞர்கள் குழு ஒன்று அவரது கடைக்குச் சென்று, ஆபாச சைகைகளால் அவளைத் துன்புறுத்தத் தொடங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கடையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து அந்தப் பெண் மீது ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயம் ஏற்பட்டது. குற்றம் செய்த இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், உதய் சவுத்ரி(Uday Chaudhary) என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் தற்போது தலைமறைவாக உள்ள இரண்டாவது சந்தேக நபரான மணீஷ் சவுத்ரியை(Manish Chaudhary) கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பலத்த தீக்காயங்களுக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண் சதார்(Sadar) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





