பிரான்ஸில் கைது செய்யப்பட்ட பெண்!
பிரான்சின் தலைநகருக்குள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ரயில் சென்று மேற்படி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேசியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸில் அண்மையில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல்களுக்கு பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்பிறகு நாடு முழுவதும் குண்டுவெடிப்பு குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டப்பின் இடம்பெற்ற முதலாவது சம்பவம் இதுவாகும்.
அந்த பெண்ணை தாக்கி பலத்த காயம் அடைந்ததாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.