WIPL – தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்த RCB அணி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 67 ரன்களும், சோபியா 65 ரன்களும் விளாசினர்.
பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஹெதர் நைட் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கடுமையாக போராடி 190 ரன்களே எடுத்தது.
துவக்க வீராங்கனை சோபி டிவைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். எலிஸ் பெரி 32 ரன்களும், ஹெதர் நைட் (30 நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர்.
இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது
Related posts:
இலங்கையை உலுக்கிய குற்றக் கும்பல் - அதிரடி நடவடிக்கையில் யாழ் யுவதி சிக்கியது எப்படி?
October 20, 2025காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 பேர் பலி
October 20, 2025சர்வதேச அளவில் உயரும் தங்கத்தின் விலை - தங்கக் காசுகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்
October 20, 2025ஐரோப்பாவிலிருந்து ஆப்கானியர்களை நாடு கடத்த 20 நாடுகள் அழுத்தம்
October 20, 2025(Visited 4 times, 1 visits today)