ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் அச்சுறுத்தும் குளிர்கால வைரஸ்கள் – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற தொற்றுநோய்கள் வேகமாக பரவி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதனால் ஏராளமான குளிர்கால வைரஸ்கள் பரவி வருவதால், மருந்தகங்கள் மற்றும் மருத்துவரைச் சந்திக்கும் இடங்களில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் இருமல் தவிர, பலர் மூட்டு வலி, தொண்டை கரகரப்பு அல்லது மூக்கு அடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி, காய்ச்சல் பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது.

டிசம்பர் நடுப்பகுதியில் 100,000 பேருக்கு ஐந்து என பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆண்டின் கடைசி வாரத்தில் இது 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.காய்ச்சல் தொற்றுநோய் ஜனவரி இறுதியில் உச்சத்தை எட்டும் என்று நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. காய்ச்சலுடன் மற்ற வைரஸ்களும் பரவுகின்றன நிலையில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்