தைவானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் சிங்- தே தெரிவு!
தைவானின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (13.01) இடம்பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி தைவானின் பிரதான எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வில்லியம் லாய் சிங்-தே தைவானின் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெற்றிக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள லாய், “நாங்கள் ஜனநாயகத்தை எவ்வளவு போற்றுகிறோம் என்பதை உலகுக்கு காட்டுகிறோம். உலகின் ஜனநாயக நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
வில்லியம் லாயின் ஜனநாயக முற்போக்குக் கட்சி தைவானின் தனி அடையாளத்தை ஆதரிக்கிறது மற்றும் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களை நிராகரிக்கிறது. ஆகவே இனி வரக்கூடிய சீனா – தைவான் மோதல் குறித்து சர்வதேச நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.