விமலும், கம்மன்பிலவும் மீண்டும் மஹிந்தவுடன் இணைவார்களா?
அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்கும் பணியை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைமைத்துவம் தற்போது உருவாகி வருவதாகவும், தமது கட்சிக்கு புதிய மக்கள் ஈர்ப்பு இருப்பதால், இரண்டு எம்.பி.க்களையும் மீண்டும் இணைத்துக் கொள்வதன் மூலம் கட்சி பலப்படுத்தப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறந்த மத்தியஸ்தர் என்றும், எனவே இந்த பணிகளை தாமதிக்காமல் துரிதப்படுத்த வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன எம்பிக்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டமையினால் மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சைக் கேட்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.