அரசியல் இலங்கை செய்தி

பதவி விலகுவாரா பிரதமர்? வெளியானது அறிவிப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  Dr. Harini Amarasuriya பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர Devananda Suraweera தெரிவித்தார்.

கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டுக்கு, மாணவர் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்ககூடிய வகையில் எந்தவொரு கல்வி மறுசீரமைப்பும் இடம்பெறமாட்டாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை என்னவென்பது எமக்கு புரிகின்றது.

அதற்கமையவே எமது செயல்பாடு இடம்பெறும். மக்களுக்கு துளியளவும் துரோகம் இழைக்காத வகையில் அரசாங்கத்தின் பயணம் தொடரும்.

கல்வி மறுசீரமைப்பென்பது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே, இது விடயத்தில் குறுகிய நோக்கில் அரசியல் நடத்துவதற்கு எவரும் முற்படக்கூடாது.

நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறைமையை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் பிரதமரை இலக்கு வைத்து போலி தகவல்களை பரப்புவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆளுங்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் முற்படுகின்றனர். ஆனால் எதிரணியின் கனவு பழிக்காது.

பிரதமர் பதவி விலகவேண்டிய தேவை எழவில்லை. அவர் பதவி விலகவும் மாட்டார்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!