ஓய்வை அறிவிப்பாரா ரோஹித் சர்மா? குழப்பத்தில் ரசிகர்கள்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடைசி 13 இன்னிங்ஸில், ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது அவர் மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில், முதல் இன்னிங்சில் ரோஹித் ஷர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, பேட்டிங்கில் சொதப்பிய ரோஹித் சர்மாவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். சொல்லப்போனால், ரோஹித் சர்மா ஓய்வு பெறப்போகிறார்? என்கிற வதந்தி ஒன்று சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதற்கு காரணம், ஆட்டம் இழந்து வெளியேறிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய கையுறைகளை மைதானத்திற்கு வெளியே கைவிட்டுவிட்டு சென்றது தான். இந்நிலையில், ரோஹித் சர்மா தனது கையுறைகளை மைதானத்தில் விட்டுச் சென்றதை கவனித்த நெட்டிசன்கள், இணையத்தில், ரோஹித் சர்மா ஓய்வு பெற போகிறாரா என்ற வதந்திகளை பரப்பி வந்தனர்.
ஆனால், இது வெறும் வதந்தி மட்டுமே என்றும் இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், தோனியை போலவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறப் போகிறாரா? என்கின்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.