இலங்கையில் கையடக்க தொலைபேசி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பா?
இலங்கையில் கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேவை பொதிகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகயாகியுள்ளது.
எனினும் அவ்வாறு வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சந்தைப்படுத்தல் போட்டிப் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
இது உண்மைக்குப் புறம்பான தகவலாகும். அவ்வாறான எந்தவொரு விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என சகல தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 53 times, 1 visits today)





