நுகேகொடை பேரணியில் மஹிந்த பங்கேற்பாரா? நாமல் தகவல்!
நுகேகொடையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க மாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் பேரணி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மகிந்த ராஜபக்ச எப்போதும் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் நின்றவர். அவரது அரசியலின் கீழ் நாங்கள் அனுபவத்தைப் பெற்று வளர்ந்தோம்.
எனவே, ஒரு போராட்டத்தை (அரகலய) எவ்வாறு வழிநடத்துவது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று நாமல் ராஜபக்ச கூறினார்.





