ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய காட்டுத்தீ – இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல நாடுகள் பாதிப்பு

தெற்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பால்கன் நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த நாடுகளில் வெப்பநிலை ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில பகுதிகளில் வெப்பநிலை 44 பாகை செல்சியஸைத் தாண்டக்கூடும் என்று ஸ்பெயினில் வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 4,000 பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் மட்டும் ஏற்பட்ட காட்டுத்தீயின் எண்ணிக்கை 30க்கும் அதிகமாகும். தெற்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளன.
சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸின் முக்கால்வாசிப் பகுதி தற்போது அதிக வெப்பநிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளது. பலத்த காற்று காரணமாக கிரேக்கத்தில் 100க்கும் மேற்பட்ட காட்டுத்தீ ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.