கிரீஸில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!
ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வருகின்ற நிலையில், கிரீஸில் உள்ள கடலோர நகரங்களில் இரண்டு பெரிய காட்டுத் தீ பரவியுள்ளது.
இதன்படி ஏதென்ஸுக்கு அருகிலுள்ள இரண்டு நகரங்களில், காட்டுத்தீயின் காரணமாக வீடுகள் எரிந்து சேதமாககியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேக்க தலைநகர் ஏதென்ஸுக்கு மேற்கே 50 மைல் (80 கிமீ) தொலைவில் அமைந்துள்ள கோடைக்கால முகாமில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்க உள்ளூர் மக்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.





