காட்டுத்தீ அபாயம் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர தகவல்!

இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே உள்ள எஸ்தாவோல் காட்டில் நேற்று (30) ஏற்பட்ட தீ, தற்போது கடுமையான காட்டுத்தீயாக பரவி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் யாராவது இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களுக்கு இடையில், ஜெருசலேமுக்கு அருகில் தீ பரவி வருகிறது.
நாட்டின் மிகவும் வறண்ட வானிலை மற்றும் அதிக காற்று ஓட்டம் காரணமாக இது வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)