நீதிமன்றத்தில் கணவனை கத்தியால் குத்திக் கொலைசெய்த மனைவி

நீதிமன்ற வளாகத்தில் கடற்படை அதிகாரி கணவரைக் கொன்ற பெண்ணையும் அவரது காதலனையும் வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்கன் ரஸ்தோகி (27) மற்றும் சாஹில் சுக்லா (25).
தனது கணவரை குத்திக் கொன்ற பிறகு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு டிரம்மில் சிமெண்டை நிரப்பி அதை மூடினார்.
கொடூரமான கொலைக்குப் பிறகு, இருவரும் சிம்லாவுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு மார்ச் 17 அன்று திரும்பினர்.
இறந்தவர் பிரம்மபுரியில் உள்ள இந்திரா நகர் ஃபேஸ்-2 இல் வசிக்கும் 29 வயதான சவுரப் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மார்ச் 4 ஆம் திகதிக்குப் பிறகு அந்த இளைஞனைப் பற்றி எந்த செய்தியும் இல்லை.
சௌரப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து, சகோதரர் பொலிசில் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை குறித்த விவரங்கள் தெரியவந்தன.
முஸ்கனும் சாஹிலும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடலை ஒரு டிரம்மில் புதைத்து சிமெண்டால் மூடியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டனர்.
பல பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, வழக்கறிஞர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சூழ்ந்து கொண்டது.
பொலிஸ் சுற்றிவளைப்பை மீறி உள்ளே நுழைந்த சாஹில் சுக்லா சில வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.