பிரித்தானியாவில் டோரி எம்பிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கொந்தளிக்கும் மக்கள்!!
பிரித்தானியாவின் NHS மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நெருக்கடியின் அளவை பேரழிவு தரும் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த விடயம் டோரி எம்பிகள் தேசிய மருத்துவமனையை எவ்வாறு பராமரித்துள்ளார்கள் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே வரும் தேர்தலில் டோரி எம்பிகளுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியையும் தொடுத்துள்ளது.
மருத்துவமனை சேதமடைந்தமையால் தீவிர சிகிச்சைப்பிரிவுகள் பாதிக்கப்பட்டதுடன், நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் டஜன் கணக்கானவர்களின் சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சிலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டெப்பிங் ஹில், நீண்டகாலமாக கடுமையான உள்கட்டமைப்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தாலும், அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் “40 புதிய மருத்துவமனைகள்” வாக்குறுதியில் ஒன்றாக மாறுவதற்கான மருத்துவமனையின் விண்ணப்பம் 2019 இல் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறாக பிரித்தானியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் கவனிப்பாரற்று காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆக டோரி எம்பிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.