உலகக் கோப்பை யாருக்கு – பிரபல ஜோதிடரின் கணிப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது.
நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் போட்டியிடுகின்றது.
இந்நிலையில், இந்த ஆண்டில் பிறந்த கேப்டனின் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.
இவர் முன்னதாக, டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்து இருந்தார். இதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக் கோப்பையை யாரின் தலைமையிலான அணி வெல்லும் என்பதையும் கச்சிதமாக கணித்து இருந்தார்.
இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரை 1987ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.
அவர் கணித்துள்ளதுபடி, வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1987, மார் 24ஆம் திகதி பிறந்தவர். இதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 1987, ஏப்ரல் 30ஆம் திகதி பிறந்தவர். இதனால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் உலகக் கோப்பையை வசப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.