புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் யார்? ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின் தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் புதிய சுற்றாடல் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இதன்போது சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டதால், அவரது அமைச்சுப் பதவி காலியானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் சட்டபூர்வமானது என தீர்ப்பளித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





