டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையில் தவறு ஒன்றும் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உலக நாடுகள் வரிகளால் அமெரிக்காவை கபளீகரம் செய்யும்போது இறக்குமதி பொருட்களுக்கு டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க மதுபானத்திற்கு இந்தியா 150 சதவீதம் வரியும், வெண்ணெய் போன்ற உணவுப்பொருட்களுக்கு கனடாவில் 300 சதவீத வரியும், அரிசிக்கு ஜப்பான் 700 சதவீத வரியும் விதிப்பதாக செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.





