புதுச்சேரியிலும் விஜய்க்கு விசில் சின்னம்!
தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சி தலைவர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதுச்சேரி மாநிலத்திற்கான புதிய நிர்வாகக் குழுவையும் நியமித்துள்ளார்.
“ புதுச்சேரி மாநிலத்தில் தவெக-வின் அன்றாடப் பணிகளையும் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்க, புதியதாக 30 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.
இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தவெக-வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.
தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது.
நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்.” என்று விஜய் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




