பல ஐபோன்களில் சேவையை நிறுத்தும் WhatsApp
ஆப்பிள் நிறுவனத்தின் பல iOS வெர்ஷன்களை சப்போர்ட் செய்ய வாட்ஸ்அப் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது, இதன் மூலம் பல iPhone மாடல்கள் மற்றும் iOS ரிலீஸ்களை பெறும் யூஸர்கள் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன வாட்ஸ்அப்-ஐ தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் பல iOS வெர்ஷன்களை சப்போர்ட் செய்ய வாட்ஸ்அப் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது, இதன் மூலம் பல iPhone மாடல்கள் மற்றும் iOS ரிலீஸ்களை பெறும் யூஸர்கள் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன வாட்ஸ்அப்-ஐ தடையின்றி பயன்படுத்த முடியும்.
வாட்ஸ்அப்பின் இந்த தொடர்ச்சியான அணுகுமுறை அது பயன்படுத்தப்படும் டிவைஸ்களின் வரம்பை விரிவுபடுத்த உதவி வருகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒத்துப்போகவும், யூஸர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்தவும் மெட்டா நிறுவனம் தற்போது சில பழைய iOS வெர்ஷன்களுக்கான சப்போர்ட்டை படிப்படியாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக வரும் மே 5, 2025 முதல் iOS-ன் பழைய வெர்ஷன்களுக்கான சப்போர்ட்டை நிறுத்துவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
இந்த மெசேஜிங் ஆப், TestFlight-ல் பழைய பீட்டா வெர்ஷன்கள் வழியாக அணுக முயற்சிக்கும் யூஸர்ர்களுக்கு கூட, 15.1-க்கு முந்தைய iOS வெர்ஷன்களை சப்போர்ட் செய்யாது.
இந்த நடவடிக்கைக்கு முன்னதாக, வாட்ஸ்அப் ஏற்கனவே பீட்டா டெஸ்ட்டர்கள் இந்த டிவைஸ்களில் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் வெர்ஷனை இன்ஸ்டால் செய்வதை தடுத்துள்ளது. வாட்ஸ்அப் வேலை செய்வதற்கான iOS தேவையை நிர்ணயிப்பதன் மூலம், யூஸர்களின் ஆப் யூஸிங் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்த முடியும், இதற்காக புதிய iOS அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை வாட்ஸ்அப் நோக்கமாக கொண்டுள்ளது.
iOS-க்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 25.1.10.72-ஐ இன்ஸ்டால் செய்யும் முன், பீட்டா ப்ரோகிராமில் தங்கள் iPhone-ஐ சேர்த்த யூஸ்ர்கள், தங்கள் டிவைஸ் iOS 15.1 அல்லது அதற்கு பிறகு வெளியான வெர்ஷனில் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாட்ஸ்அப்-இன் இந்த நடவடிக்கை மூலம் iPhone 6, iPhone 6 Plus மற்றும் iPhone 5s போன்ற பழைய டிவைஸ்களை பயன்படுத்தும் பீட்டா டெஸ்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த டிவைஸ்களி iOS 15 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்ய முடியாது.
தற்போதைய வாட்ஸ்அப் பீட்டா ரிலீஸ் காலாவதியாகும் முன் இன்னும் சில வாரங்களுக்கு தொடர்ந்து செயல்படும். இருப்பினும் யூஸர்கள் ஆப்-ன் ஸ்டேபிள் வெர்ஷனுக்கு மாறலாம், இது மே முதல் வாரம் வரை அப்டேட்ஸ்களை பெறும். iOS 12, iOS 13 மற்றும் iOS 14 ஆகியவற்றுக்கான சப்போர்ட்டை வாட்ஸ்அப் நிறுத்தியதும், லேட்டஸ்ட் iOS வெர்ஷன்களுடன் இணக்கமான புதிய அம்சங்களை இணைக்க முடியும். அதே போல வாட்ஸ்அப்பின் ஆப் ஸ்டோர் பட்டியலில் இப்போது iOS 15.1 அல்லது அதற்கு பிந்தைய வெர்ஷன் தேவைப்படுகிறது, மேலும் தற்போது iOS 12 ஐ சப்போர்ட் செய்யும் வாட்ஸ்அப் பிசினஸிற்கு விரைவில் iOS 15.1 வெர்ஷன் தேவைப்படும்.
உங்கள் ஐபோனில் வாட்ஸ்அப்-ன் லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்வதற்கான படிகள்:
– உங்கள் ஐபோனில் உள்ள செட்டிங்ஸை ஓபன் செய்யவும்
– பின் General ஆப்ஷனுக்கு சென்று அதிலிருக்கும் Software Update என்பதற்கு செல்லுங்கள்
– அப்டேட் இருந்தால் Install Now என்பதை டேப் செய்யவும்
– இதனை தொடர்ந்த்து உங்கள் டிவைஸில் சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்யலாம்
இந்த மாற்றம் ஸ்டாண்டர்ட் வாட்ஸ்அப் ஆப் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும், ஏனெனில் இரண்டு ஆப்ஸ்களும் ஒரே அன்டர்லையிங் கோட் மற்றும் சிஸ்டம் தேவைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நீங்கள் தற்போது பழைய iOS வெர்ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், வாட்ஸ்அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்த உங்கள் டிவைஸை அப்டேட் செய்து கொள்ளுங்கள் அல்லது புதிய iOS வெர்ஷன்களை சப்போர்ட் செய்யும் iPhone-க்கு மாறுங்கள்.