கொழும்பு மாநகர சபையில் நாளை நடக்கப்போவது என்ன? அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!
“கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை (31) நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நாளை (31) மீண்டும் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
“ கொழும்பு மாநகரசபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டம்தான் நாளை மீண்டும் முன்வைக்கப்படுகின்றது.
வரவு- செலவுத் திட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் விவாதத்தின்போது உறுப்பினர்களால் தகவல்களை வெளியிட்டிருக்க முடியும்.
அவ்வாறு செய்யாமல், அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டே வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
எனவே, அன்று எதிராக வாக்களித்தவர்கள், நாளை ஆதரவாக வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம். பாதீடு நிறைவேற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
வரவு- செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு முன்னோக்கி கொண்டு செல்லாம்.”- எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் முதன்முறையாக முன்வைக்கப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





