தென்கொரிய இசைக் குழுவின் கலைஞரை சந்திக்க சிங்கப்பூர் பெண் செய்த செயல்!

சிங்கப்பூர் – சாங்கி விமான நிலையத்தில் பயண அனுமதிச் சீட்டைத் (Boarding Pass) தவறாகப் பயன்படுத்தியதற்காக 25 வயதுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி நடந்தது. K-pop எனப்படும் பிரபல தென்கொரிய இசைக் குழுவின் கலைஞர் ஒருவரைச் சந்திக்க அவர் அவ்வாறு செய்திருந்தார்.
கலைஞரைச் சந்திக்கவேண்டும், பயணிகள் காத்திருக்கும் இடத்திற்குள் நுழையவேண்டும் என்பதற்காகவே அந்தப் பெண் விமானச் சீட்டை வாங்கியதாகத் தெரியவந்துள்ளது.
அவருக்குச் சிங்கப்பூரைவிட்டுக் கிளம்பும் திட்டமில்லை. கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார்.
விமான நிலையம் போன்ற உயர்நிலைப் பாதுகாப்பு கடைப்பிடிக்கப்படும் பகுதிகளில் கொடுக்கப்படும் அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை அந்தச் சட்டம் தடுக்கிறது.
(Visited 16 times, 1 visits today)