உலகம் செய்தி

வெனிசுலா குறித்து ட்ரம்ப் மேற்கோள் காட்டிய மன்ரோ கோட்பாடு என்ன?

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கடத்தியதை 19 ஆம் நூற்றாண்டு அமெரிக்க கொள்கை (Monroe Doctrine, 1823) புதுப்பிப்பாக அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட்(Donald Trump), விளக்கியுள்ளார்.

அமெரிக்கா பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றம் வரை நாட்டை நடத்தும் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மன்ரோவால் (James Monroe) 1823 ஆம் ஆண்டில் மன்ரோ கோட்பாடு (Monroe Doctrine) கொள்கை அறிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவின் மேற்கு அரைக்கோளத்தில் (Western Hemisphere) தலையீடு செய்யக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
அமெரிக்கா இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.

1904 ஆம் ஆண்டில், ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt), “ரூஸ்வெல்ட் தொடர்பு (Roosevelt Corollary)” மூலம், அமெரிக்காவுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் தலையீட்டின் உரிமை மற்றும் பொறுப்பை வலியுறுத்தினார்.

கடந்த சில தசாப்தங்களில், அமெரிக்கா இதை பல நாடுகளில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!