நிதி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் லெபனானின் ‘இடைவெளிச் சட்டம்’ என்ன?
உலகின் மிக மோசமான நிதி நெருக்கடிகளை திர்கொண்ட லெபனானில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வைப்பாளர்களுக்கு அவர்களின் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கும் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், லெபனான் நாணயம் வேகமாக உயரத் தொடங்கியது. வங்கிகள் கதவுகளை மூடியதால் வைப்பாளர்கள் பணத்தை எடுக்க முடியாமல் இருந்தனர்.
சிலர் வங்கிக் கிளைகளை முற்றுகையிட்டு பணம் பெற்றனர். அந்த காலத்தில் லிரா மதிப்பில் 98 சதவீதம் இழந்தது.
இப்போது, “இடைவெளிச் சட்டம்” என்ற புதிய சட்டத்தின் கீழ், $100,000 வரை வைப்புகளை நான்கு ஆண்டுகளுக்குள் திரும்பக் கொடுக்க முடியும். இது முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றமாகும்.
முந்தைய திட்டங்களில் பணம் திருப்பிச் செலுத்த நேரம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருந்தது.
முன்னாள் பிரதமர் ஹசன் டயப்பின் காலத்தில் 2020இல் முன்மொழியப்பட்ட திட்டங்களில் வைப்பாளர்கள் $500,000 வரை பணத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.
“இது மிகப்பெரிய இழப்பாக இருக்கலாம். வங்கிகளைப் பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட நடவடிக்கை” என வைப்புத்தொகையாளர்கள் சங்கத்தின் வழக்கறிஞர் ஃபௌத் டெப்ஸ், தெரிவித்தார்.
முழுமையான நிதி தணிக்கை நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நவாஃப் சலாம் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் செய்த அனைத்து செயல்பாடுகள், நிர்வாகிகளுக்கு வழங்கிய போனஸ்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என்றும் அரசு மற்றும் வங்கிகளின் இடையே முரண்பாடுகள் நிறைய உள்ளதால், தணிக்கை முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





