வெனிசுலாவில் நடந்தது இலங்கையிலும் நடக்கலாம்: நாமல் எச்சரிக்கை!
“ நாட்டின் கலாசாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப அரசாங்கம் தொடர்ந்து செயல்படுமானால் வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ பாட புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள் பற்றி இந்த அரசாங்கம் எப்படி புரிந்துகொள்ளும்?
கலாசாரம், ஆன்மீக பண்பாடு இன்றி நாடு ஏனோ, தானோ என்று சில மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயணிப்பது ஆபத்தானது.
ஏனெனில் நாடொன்றுக்கு (வெனிசுலா) வந்து விமானத்தில் ஜனாதிபதியை கொண்டுசென்றதுபோன்று எமது நாட்டிலும் நடக்கக்கூடும்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறப்பட்டாலும் ஆளுங்கட்சியினருக்கு வேறுபட்ட விதத்தில் செயல்படும் நிலையே காணப்படுகின்றது.
அதேவேளை, பிரதமர் பதவி விலக வேண்டும். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் பதவி விலகவேண்டும். “ – என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.
வெனிசுலா விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. அந்நாட்டின் பெயரைக்கூட பயன்படுத்தவில்லை.
நாடொன்றுக்குள் புகுந்து ஜனாதிபதியை சிiறிபடித்து சென்றது என்ற வசனம்மூலம் அவர் வெனிசுலாவை விளித்துள்ளார் என்பது புலனாகின்றது.





