ஆர்மீனிய இராட்சத ட்ராகன் கற்கள் எதை புலப்படுத்தப்படுகிறது?
ஆர்மீனிய மலைப்பகுதிகளில் காணப்படும் ராட்சத “ட்ராகன் கற்கள்” ஒரு பண்டைய “நீர் வழிபாட்டு முறையால்” வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
விலங்கு வடிவங்களில் செதுக்கப்பட்ட தூண் கற்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
இவை ஆர்மீனியா மற்றும் அண்டை நாடுகளின் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.
உள்ளுர் மக்கள் மத்தியில் விஷப்ஸ் (vishaps) என்று அழைக்கப்படும் இந்த தூண்கள் 1.1 மீ முதல் 5.5 மீ உயரம் கொண்டவை. அவை ஆண்டிசைட் (andesite) அல்லது பாசால்ட் (basalt) போன்ற உள்ளூர் கற்களிலிருந்து செதுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் 1,000 மீ முதல் 3,000 மீ உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த தூண்களை மக்கள் எவ்வாறு அந்த பகுதியில் நிறுத்தினார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் GIS மேப்பிங், 3D மாடலிங் மற்றும் புள்ளிவிவர கருவிகளைப் பயன்படுத்தி மலைப்பகுதிகளில் உள்ள 115 காட்சிகளையும் அவற்றின் பரவலையும் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
இதில் தூண்கள் ஒரு மீன் அல்லது நீட்டிக்கப்பட்ட கால்நடைத் தோல் அல்லது மையக்கருக்களை இணைக்கும் கலப்பின வடிவத்தில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷாப்புகள் ஒரு பண்டைய நீர் வழிபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையவை என்ற கருதுகோளை இந்த கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன.





