செய்தி விளையாட்டு

என்னது? எனக்கு Bed Rest ah? ஒரே சிரிப்பா வருதுங்க! உடல்நலம் குறித்து பும்ரா தந்த அப்டேட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். பும்ரா ஆஸ்திரேலியா மண்ணில் தனி ஆளாக இந்திய அணியின் வெற்றிக்கு போராடினார்.

வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமை கிடைத்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனினும் பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காததால் இந்திய அணி தொடரை இழந்தது.

இந்த நிலையில் பும்ராவுக்கு ஏற்கனவே முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

தற்போது தான் அவர் முழு உடல் தகுதி பெற்று கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வந்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் பும்ரா அதிக ஓவர்கள் வீசியதால் அவருக்கு முதுகுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருந்தது.

இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் பாதியில் விலகினார்.

இந்த நிலையில் தற்போது பெட் ரெஸ்ட்டில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், முதுகுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருப்பது காயத்தின் அறிகுறி என்பதால் அது குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தல் தேவைப்படுவதாகவும் பிசிசிஐ கூறியதாக செய்தி வெளியானது.

இதனால் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமானது. இந்த நிலையில் தனது உடல் தகுதி குறித்து பும்ரா தற்போது மௌனத்தை கலைத்து இருக்கிறார்.

இந்த செய்தியை குறிப்பிட்ட பும்ரா, பொய் செய்திகளை பரப்புவது என்பது மிகவும் சுலபம் என்று எனக்கு தெரியும்.

ஆனால் இந்த செய்தி என்னை சத்தமாக சிரிக்க வைத்தது. இது நம்ப தகுந்த தகவல்கள் கிடையாது என்று பும்ரா குறிப்பிட்டிருக்கிறார்.

பும்ராவின் இந்த அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் முகமது சமி தமக்கு காயம் ஏற்படவில்லை என்று இதேபோல் தான் பத்திரிகையாளர்களை கலாய்த்தார்.

ஆனால் அவர் ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத சூழல் காயத்தால் ஏற்பட்டது.

இதுதான் பும்ராவும், தனக்கு ஏற்பட்ட காயத்தை மறைத்து இப்படி பதிவிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி