எப்ஸ்டீன் விவகாரத்தில் ரோயல் விமானப்படை தளங்கள் பயன்படுத்தப்பட்டதா?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், ரோயல் விமானப்படை தளங்களைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளை இங்கிலாந்துக்குள் கடத்தினாரா என்பதை விசாரிக்க ஏதுவாக, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பாதுகாப்பு அமைச்சக பதிவுகளை மறுஆய்வு செய்ய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey ) உத்தரவிட்டுள்ளார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்தவொரு விமானப் பதிவுகளையும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு வழங்குவது பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown), ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten ) வர்த்தக தூதராக இருந்த காலத்தில் எப்ஸ்டீனைச் சந்திக்க ஜெட் விமானங்களையும் RAF தளங்களையும் பயன்படுத்தியாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
வாஷிங்டனுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் மற்றும் லார்ட் பீட்டர் மண்டேல்சன் ஆகியோர் எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




