பலவீனமான போர் நிறுத்தம் – பாலஸ்தீனியர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு!
இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு வாரமாக நடைமுறையில் உள்ள பலவீனமான போர்நிறுத்தத்தின் கீழ் மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மற்றொரு முன்னேற்றத்தில், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை “சுத்தம்” செய்வதற்காக, காசாவின் பெரும்பாலான மக்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் உட்பட வேறு இடங்களில் தற்காலிகமாக மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பரிந்துரைத்தார்.
எகிப்து, ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே அத்தகைய சூழ்நிலையை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)