அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படுவோம் – பைடனிடம் கூறிய அநுர
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதழபதி தனது X கணக்கில் ஒரு குறிப்பை வைத்து இந்த வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
“இலங்கை மக்கள் உங்களை ஒரு சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் அதில் பெருமைப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பதிவிற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எனது தலைமையில் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார்.
‘X’ தளத்தில் ஜோ பைடனின் வாழ்த்து செய்திக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா உடனான நீண்டகால நட்பை பலப்படுத்தும் விதமாக செயற்பட உள்ளதாக அநுர உறுதியளித்துள்ளார்.