ஹமாஸ் தலைவர் கொலைக்கு பழி தீர்ப்போம் : ஈரான் அரசு

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன் கண்காட்சி நடைபெற்றது.
இஸ்ரேலை நிச்சயம் பழி வாங்குவோம் என்ற வாசகத்துடன், இந்த கண்காட்சி நடைபெற்றது.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கடந்த ஜூலை மாதம், ஈரானில் வைத்து கொல்லப்பட்டார்.
அவரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஈரான் அரசு குற்றம்சாட்டிவருகிறது.
இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் நாடு திரும்பிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், ஹனியே கொலைக்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)