Site icon Tamil News

எவ்வாறு நிராகரிக்கப்பட்டாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்போம் – பைடன்

உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதற்காக அமெரிக்க வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிக் கொள்வனவு நடைமுறை நிராகரிக்கப்பட்டாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புதிய வரவு செலவு திட்டத்தில் உக்ரைனுக்கு போர் உதவியாக 6 பில்லியன் டொலர்களை ஒதுக்க அமெரிக்கா முன்மொழிந்த நிலையில் எனினும் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், கடைசி நிமிடத்தில் வரவு செலவுத் திட்டம் நிராகரிக்கப்பட்ட போதிலும், உக்ரைனுக்கான இராணுவ உதவி நிறுத்தப்படாது என்று வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வரவு செலவுத் திட்டம் நிராகரிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் ஆதரவை உக்ரைன் தொடர்ந்து பெறுவதை நம்பலாம் என பைடன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமேரிக்க ஜனாதிபதி,

“எந்த சூழ்நிலையிலும், உக்ரைனுக்கான அமெரிக்க ஆதரவை குறுக்கிட அனுமதிக்க முடியாது.

உக்ரைன் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தனது நாட்டிலிருந்து தொடர்ந்து ஆதரவை பெறும்.

போருக்கான நிதியை மீட்டெடுப்பது குறித்து, அவர் உட்பட அமெரிக்கர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக வருவார்கள். ” என தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ரஷ்யர்கள் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்கு 46 டொலர் பில்லியன் இராணுவ உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version