அணுசக்தி நிலையங்களை அதிக பலத்துடன் மீண்டும் கட்டுவோம் – ஈரான்!
தெஹ்ரான் தனது அணுசக்தி நிலையங்களை “அதிக பலத்துடன்” மீண்டும் கட்டியெழுப்பும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இன்று தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்த அணுசக்தி நிலையங்களை மீண்டும் தொடங்க தெஹ்ரான் முயற்சித்தால், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இன்று அணுசக்தி தளங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அழிப்பது எங்களுக்கு ஒரு பிரச்சனையை உருவாக்காது. அதிக பலத்துடன் மீண்டும் கட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜுன் மாதம் அமெரிக்கா ஈரான் அணுவாயுதங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அணு செறிவூட்டல்களை மேற்கொள்ளவதாக குறிப்பிட்டு திடீரென தாக்குதல் நடத்தியது.
இருப்பினும் தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் சொந்த தேவைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் மேற்குலக நாடுகள் ஈரானோடு முரண்படுகின்றன. இந்நிலையில் மசூத் பெஷேஷ்கியனின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.





