தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம்.! இஸ்ரேல் பிரதமரின் பரபரப்பு அறிவிப்பு
ஹமாஸின் இராணுவத்தையும் ஆளும் திறனையும் அழிக்கும் குறிக்கோளுடன் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் போரின் மத்தியில் இருக்கிறோம். ஹமாஸின் இராணுவம் மற்றும் ஆட்சித் திறன்களை அழிக்கும் தெளிவான இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். நாங்கள் இதை முறையாகச் செய்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “முதல் தடுப்பு நிலையை தகர்த்துள்ளோம். 2வது நிலை வான்வெளி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 வது கட்டமாக காசா பகுதிக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தரைவழி ஊடுருவலை விரிவுபடுத்தியுள்ளது.
வடக்குப் போர்முனையில் இஸ்ரேல் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தொடர்நது செய்து வருகிறது.”
“ஆனால் இதற்கு இன்னும் நேரம் ஆகலாம். ஏனென்றால் இதில் நிறைய குழிகள் இருக்கும். சிரமங்கள் இருக்கும், இழப்புகள் ஏற்படும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இறுதியில், ஹமாஸ் நசுக்கப்படும். ஹமாஸ் தோற்கடிக்கப்படும்.
ஒருவேலை ஹமாஸ் தோற்கடிக்கப்படவில்லை என்றால், தீமையின் அச்சு வெல்லும். தீமையின் அச்சு வென்றால், சுதந்திர உலகம் இழக்கும்.” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.