போரினால் ஆதாயம் அடையும் எண்ணம் எங்களுக்கு இல்லை – சீனா!
உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் ஆதாயம் அடையும் எண்ணம் தனது நாட்டிற்கு இல்லை என்றும், பெய்ஜிங் முன்மொழிந்த அமைதி திட்டம் குறித்து மேலும் விவாதங்கள் நடத்தப்படும் எனவும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
பெர்லினில், ஜேர்மன் பிரதிநிதியுடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang, மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் சீன அரசாங்கம் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகளை சுட்டிக்காட்டினார்
ஐரோப்பாவிற்கான சீனாவின் சிறப்பு தூதர் விரைவில் உக்ரைனுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
போரில் நாங்கள் நெருப்பில் எண்ணெயை ஊற்ற மாட்டோம். பெய்ஜிங் ரஷ்யாவிற்கு அரசியல் மற்றும் பொருள் ஆதரவை வழங்குவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. சீனா ரஷ்யாவுடன் “சாதாரண” வர்த்தக உறவுகளைப் பேண வேண்டும் எனத் தெரிவித்தார்.