இலங்கை செய்தி

நாங்கள் பொருளாதார மாற்ற சட்டத்திற்கு எதிரானவர்கள் – சுனில் ஹந்துன்நெத்தி

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார மாற்ற சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மிகக் குறைந்த வகையில் பாரதூரமான சட்டமூலமொன்றை முன்வைத்து முதலீட்டுச் சபையை இல்லாதொழிக்க முன்வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு தேசிய மக்கள் கட்சி முற்றாக எதிரானது எனவும் ஹந்துன்நெத்தி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கிணங்க, இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து அதற்கு எதிராக செயற்படுவதாகவும், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அதற்கு எதிராக சிறந்த தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை