நோவக் ஜோகோவிச்சின் தலையில் விழுந்த தண்ணீர் போத்தல்
இத்தாலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் பின்னர் தனது ரசிகர்களுக்கான நினைவுப் புத்தகங்களில் கையெழுத்திட்ட நோவக் ஜோகோவிச்சின் தலையில் தண்ணீர் போத்தல் விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளியில், உலக நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தலையில் தண்ணீர் போத்தல் விழுந்ததால் தரையில் விழுந்து கிடப்பதைக் காட்டுகிறது.
கூட்டத்தில் இருந்த ஒருவரின் பையில் இருந்து போத்தல் விழுந்திருக்கலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ரோமில் உள்ள மைதானத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு உதவினார்.
எவ்வாறாயினும், நோவாக் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், ஜோகோவிச் தான் சந்தித்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு, உங்கள் விசாரணைகளுக்கு நன்றி என்று கூறியிருந்தார். இது ஒரு விபத்து. நான் ஹோட்டலில் சிகிச்சையுடன் ஓய்வெடுக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்.” என்று கூறியுள்ளார்.