எச்சரிக்கை!!கனடாவில் தேர்தலை இலக்காக வைத்து அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள்
கனடாவில் தேர்தலை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்களை மையப்படுத்திய சைபர் தலையீடுகள் பல்வேறு வழிகளில் தலைதூக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய சைபர் பாதுகாப்பு நிலையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலிலும் இவ்வாறான சைபர் தாக்குதல்கள், தலையீடுகளை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.நுட்பமான வழிகளில் அதிகளவில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகின் அநேகமான தேசிய தேர்தல்களில் இவ்வாறான சைபர் தாக்குதல்கள் வழமையானதாகியுள்ளது.பிரதானமாக சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இவ்வாறான சைபர் தாக்குதல்களை நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களின் போதும் இவ்வாறான இணைய வழி தலையீடுகள் காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த விவகாரம் சீன – கனடிய ராஜதந்திர உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.