ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை – சிறிய குற்றம் செய்தாலும் நாடு கடத்தல்
ஜெர்மனியில் ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்த பின் குற்றவாளியாக நீதிமன்றத்தால் இனங்காணப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள் ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபுலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறிய குற்றம் செய்தாலும் நாடு கடத்தும் நடவடிக்கையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சோனிங்கன் நகரத்தில் 26 வயதுடைய சிரியா நாட்டு அகதி ஒருவர் பொது மக்கள் மீது சரமாரியான கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட பின் ஜெர்மன் அரசாங்கத்தில் அகதிகள் தொடர்பில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலங்களும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு நிராகரிக்கப்பட்ட அகதிகள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட அகதிகளை அனுப்புவதை ஜெர்மன் அரசாங்கமானது தவிர்த்து வந்துள்ளது.
தற்பொழுது “தவிர்ப்பு” என்ற சொல் முற்றாக நீக்கப்பட்டு ஏதாவது ஒரு வகையில் இவ்வாறு குற்றவாளிகளை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது.
இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு வந்த அகதிகளை நாடு கடத்துவதற்கு ஜெர்மன் அரசாங்கமானது கட்டார் நாட்டினுடைய உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டார் விமானத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு திருப்பி அனுப்பவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அகதிகளுக்கு தலா 1000 யூரோக்கள், இவர்களது செலவுக்காக வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.