சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்கள் சிலர் போலந்தில் வேலை கிடைக்கும் எனக் கண்மூடித்தனமாக நம்பி Global Recruiters அமைப்புக்குப் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களில் பணிப்பெண் ஒருவர் தமது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2022ஆம் ஆண்டில் போலந்தில் குடியுரிமை பெறுவதற்கு அந்த அமைப்பு ஏற்பாடு செய்யும் எனும் நம்பிக்கையில் அவர் அதற்கு 2,500 வெள்ளி பணம் கொடுத்திருந்தார்.
Global Recruiters அமைப்பு போலந்தின் தூதரகத்துடன் இணைந்து அவருக்கு வேலை அனுமதி, விசா ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யும் என்று உறுதியளித்தது.
சுமார் 5 ஆண்டுகள் போலந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் துப்புரவாளராகப் பணிபுரிந்து பின்னர் அங்கு நிரந்தரவாசியாக விண்ணப்பம் செய்ய அந்தப் பணிப்பெண் திட்டமிட்டிருந்தார்.
அங்குத் தமது 12 வயது மகனுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று அவர் மனக்கோட்டை கட்டினார். ஆனால் அவரது கனவு கலைந்தது. அவரது திட்டம் நிறைவேறாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
4இலிருந்து 6 மாதங்களுக்குள் வேலை அனுமதி வழங்கப்படும் என்று கூறிய அமைப்பிடமிருந்து ஈராண்டுகள் ஆகியும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அந்தப் பணிப்பெண் தாம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அமைப்பிடம் கேட்டிருந்தார்.
ஆனால் Global Recruiters அமைப்பு அதனைச் செய்ய மறுத்தது. அவரைப் போன்று வேறு 3 வெளிநாட்டு ஊழியர்களும் Global Recruiters அமைப்பிடம் பணங்கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளார்.
Global Recruiters அமைப்பு ஏமாற்றியதன் தொடர்பில் கிடைத்த புகார்களைக் கொண்டு மனிதவள அமைச்சும் பொலிஸார் விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.