பிரித்தானியாவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரித்தானியாவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கான புதிய பருவம் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களின் வருகை தொடர்பில் கல்விச் செயலாளர் பெற்றோரை எச்சரித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் “தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது முதல் வாரத்தில் வெறும் 14% மாணவர்கள் மட்டுமே முழுமையாகப் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் பருவத்தின் முதல் இரண்டு வாரங்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லத் தவறினால், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை “நல்ல தொடக்கத்திற்கு” அழைத்துச் செல்ல பள்ளிகள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்தது என்று பிலிப்சன் கூறினார்.