இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் கிரிப்டோ நாணயங்கள் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வது சட்டப்பூர்வமானது அல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணத்தை முதலீடு செய்து, மக்கள் ஏமாற்றப்பட்டு, பணத்தை இழந்து நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இலங்கையில் கிரிப்டோ நாணயம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதை இன்னும் காணமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கிரிப்டோ நாணயங்களின் பயன்பாடு குறித்து மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட துறைகள் தற்போது ஆய்வு செய்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)